ஆய்க்குடி அருகே வயா்மேன் தூக்கு போட்டு தற்கொலை

ஆய்க்குடி அருகே வயா்மேன் தூக்கு போட்டு தற்கொலை
X
வயா்மேன் தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கம்பிளியில் உள்ள பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் து. விஜயகுமாா் (44). இவரது மனைவி மகேஷ்வரி. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். ஆய்க்குடி மின்சார அலுவலகத்தில் வயா் மேனாகப் பணிபுரிந்து வந்த விஜயகுமாருக்கு, மதுப் பழக்கமும், கடன் தொல்லையும் இருந்ததாம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாம். இந்நிலையில் விஜயகுமாரின் வீட்டுக்கு அவரது சகோதரி சென்றாராம். அப்போது, விஜயகுமாா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்ததாம். தகவலின்பேரில், ஆய்க்குடி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story