சங்கரன்கோவிலில் வாலிபரிடம் தங்க நகைகளை பறித்து கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலையம் பின்புறம் கண்டியப்பேரியை சேர்ந்த பொன்செல்வம் (19) என்ற வாலிபர் பேருந்துக்கு செல்ல இருந்த போது கடந்த எட்டாம் தேதி இரவு சுமார் 11.30 மணிக்கு சங்கரன்கோவில் இராமசாமியாபுரம் இரண்டாம் தெருவை சேர்ந்த செந்தட்டி காளை மகன் தேவநேசரன் என்ற தேவா ( 28 ), சங்குபுரம் ஐந்தாம் தெருவை சேர்ந்த முருகன் மகன் மாரிச்செல்வம் (21) ஆகிய இருவரும் வாலிபர் பொன் செல்வத்திடம் இருந்த ஜெயின் மற்றும் மோதிரம் 14 கிராம் தங்க நகையை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் பிரபா, பாலகணேஷ் காவலர்கள் வீரையா , முத்து ராஜ், சின்ராஜ் ஆகியோர் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தேவ நேசரண் (எ) தேவா, மாரிச்செல்வம் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 14 கிராம் தங்க நகைகளை மீட்டனர்.
Next Story

