திருவேங்கடத்தில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் வடக்கு மண்டலத்தில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சேவை இருவாரம் நிகழ்ச்சி பயிலரங்கம் திருவேங்கடம் சிவசாம்பாவா கட்டிடத்தில் வைத்து மண்டல தலைவர் வீரகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மண்டல தலைவர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். பிரதமர் மோடி பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி சுமார் 20 இடங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் இனிப்புகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், அன்னையின் பெயரில் மரக்கன்றுகள் நடவும், பண்டிட் தீனதயாள் உபாத்யாயின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தவும், காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு தினத்தை கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டது.
Next Story

