ஒழுங்குமுறை விற்பனைகூட மேலாளர் திடீர் சாவு

  ஒழுங்குமுறை விற்பனைகூட மேலாளர் திடீர் சாவு
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம்  குலசேகரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சேர்ந்த ராஜசேகரன் (57) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் குலசேகரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மதியம் வரை ராஜசேகரன் பணிக்கு செல்லாததால், உடன்பணியாளர்கள் வீட்டில் சென்று பார்த்தனர். அப்போது ராஜசேகரன் அலுவலகம் செல்வதற்கு தயாராகி, நாற்காலியில் அமர்ந்த நிலையில் இறந்து காணப்பட்டுள்ளார். தகவலின் பேரில்  குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜசேகர் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.  வழக்கு பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story