மின்கம்பத்தில் மின் ஊழியர் பரிதாப சாவு

X
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த துணை மின் நிலையத்தில் நேற்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன. அப்போது மின்வாரிய அலுவலக கேங்மேன் சுரேஷ் (28) என்பவர் என்பவர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் மின்கம்பத்தில் ஏறி மின்வயர்களை இணைத்துக் கொண்டிருந்தார். அப்போது எந்த சத்தம் இல்லாமல் மயங்கியவர் மின்கம்பத்திலே அமர்ந்து இருந்த படி உயிரிழந்தார் பணியாளர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனை கொண்டு சென்றனர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வடசேரி போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

