சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலை துறையின் மூலம் நடைபெற்ற இலவச திருமண விழா

மணமக்களுக்கு திருமாங்கல்யம், மெட்டி, புடவை, வேட்டி, கட்டில், பீரோ, மெத்தை, கோரைப்பாய், தலையனை, மிக்ஸி, எவர்சில்வர் தட்டு, டம்ளர், குடம், கரண்டி உள்ளிட்ட 60 வகையான சீர்வரிசை பொருட்கள் ஒவ்வொரு இணையருக்கும் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலை துறையின் மூலம் நடைபெற்ற இலவச திருமண விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ம.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து புதுமண தம்பதியர்களை வாழ்த்தினார்கள். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலை துறையின் மூலம் நடைபெற்ற இலவச திருமண விழா நிகழ்ச்சியில் இன்று (14.09.2025) மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், ம.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு 05 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து புதுமண தம்பதியர்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்தினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட 2025 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பின்படியும், பொருளாதாரத்தில் பின்தங்கிய இணையர்களுக்கு திருக்கோயில்கள் சார்பாக ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 50 இணையர்கள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 1000 இணையர்களுக்கு திருக்கோயில் சார்பில் ஒரு இணையருக்கு 4 கிராம் தங்க தாலி உட்பட ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைகள் பொருட்கள் வழங்கி இலவசமாக திருமணம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்சி இணை ஆணையர் மண்டலத்தில் முதல் கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 43 இணையர்களுக்கு 02.07.2025 அன்று திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்று திருச்சி, இணை ஆணையர் மண்டலத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 05 இணைகளுக்கு சிறுவாச்சூர், அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவில் மணமக்களுக்கு திருமாங்கல்யம், மெட்டி, புடவை, வேட்டி, கட்டில், பீரோ, மெத்தை, கோரைப்பாய், தலையனை, மிக்ஸி, எவர்சில்வர் தட்டு, டம்ளர், குடம், கரண்டி உள்ளிட்ட 60 வகையான சீர்வரிசை பொருட்கள் ஒவ்வொரு இணையருக்கும் வழங்கப்பட்டது. திருமணத்திற்கு வருகை புரிந்த மணமகன் மற்றும் மணமகள் அவர்களது உறவினர்களுக்கான இரவு, காலை, மதியம் விருந்து 750 நபர்களுக்கு வழங்கப்பட்டது. என்பது குறிப்பிடதக்கது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள தங்களுக்கு, பெரும் செலவு செய்து திருமணம் செய்வதற்கு வழி இல்லை. திருமணம் என்பது வாழ்வில் கனவாகவே இருந்துவிடுமோ என்ற நிலையில் இருந்த எங்களுக்கு அரசே அனைத்து செலவையும் ஏற்று திருமணம் நடத்தி வைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றும், பெற்றோர் நிலையில் இருந்து எங்களுக்கு சீர்வரிசை வழங்கி திருமணம் நடத்திவைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்ளுக்கு வாழ்நாள் முழுதும் நன்றி தெரிவிப்பதாகவும் மணமக்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, பெரம்பலூர் உதவி ஆணையர் திருமதி உமா, திருச்சி உதவி ஆணையர் திரு.லட்சுமணன், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மணமகன், மணமகள் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர் .
Next Story