கத்தியால் குத்தி ஜிபேயில் பணம் பறித்த வாலிபர்கள்

எட்டயபுரத்தில் பெண் தலைமை காவலர் கணவரை கத்தியால் குத்தி ஜிபேயில் பணம் பறித்த வாலிபர்கள் - போலீசில் புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல்*
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த சாமுவேல் மகன் ஜேசுராஜ்(47) இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எட்டயபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். டிராக்டரில் கட்டுமானத்திற்கு தேவையான தண்ணீர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். ஜேசுராஜ் நேற்று இரவு தனது டிராக்டரை வழக்கமாக நிறுத்தும் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை அருகே நிறுத்தி விட்டு காவலர் குடியிருப்பிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை ஸ்கூட்டியில் அரிவாள் கத்தியுடன் பின் தொடர்ந்து சென்ற மூன்று வாலிபர்கள் அவரை மறித்து கத்தியால் குத்தி பணம் உள்ளதாக கேட்டுள்ளனர். அவரிடம் பணம் இல்லாததால் மொபைலில் இருந்து ஜிபேயில் ₹2300 அனுப்பியுள்ளார். அதனை தொடர்ந்து அவரது செல்லை புடுங்கி உடைத்து விட்டு. போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஓடு ஓடு என்று விரட்டி விட்டனர். அதனை தொடர்ந்து காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி இரவு பணிக்கு சென்றுவிட்டதால் அருகில் உள்ளவர்கள் அவரை எட்டயபுரம் போலீசில் புகார் செய்து விட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த எட்டயபுரம் போலீசார் எட்டயபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து குற்றவாளியை தேடிவருகின்றனர.
Next Story