கோவை அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: ஒருவர் கைது

X
கோவை, கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் கிட்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் சோதனை நடத்திய போது, தமிழகத்தில் விற்பனைக்குத் தடை செய்யப்பட்ட 78.4 கிலோ புகையிலை பொருட்களுடன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கொம்பையா (33) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

