கோவை நீதிமன்ற வளாகத்தில் தேசிய லோக் அதாலத் !

X
கோவை நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா துவக்கி வைத்தார். முதலில், கோவில்பாளையத்தை சேர்ந்த முத்தையா விபத்தில் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவி தேவகிக்கு ரூ.48.64 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய நீதியரசர், “எந்த மதத்திலும் சமாதானமே வலியுறுத்தப்படுகிறது. லோக் அதாலத் முதலில் எதிர்ப்புக்குள்ளானாலும், இன்று பல நல்ல விஷயங்களை கொண்டுள்ளது. இதன் மூலம் வழக்குகள் விரைவாக முடிவதுடன், Court Fee திருப்பி வழங்கப்படும்” என்றார். இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2,563 வழக்குகள் தீர்வு காணப்பட்டதாகவும், மக்களும் வழக்கறிஞர்களும் அளிக்கும் ஒத்துழைப்பே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இன்சூரன்ஸ், போக்குவரத்து, நிலம் தொடர்பான வழக்குகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நீதிபதிகள் பற்றாக்குறை நிலவுவதால், அரசு அதிகாரிகள் ஒத்துழைத்தால் தான் வழக்குகளை விரைவாக தீர்க்க முடியும் எனவும் நீதியரசர் குறிப்பிட்டார்.
Next Story

