திருமாவளவன்: திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை - திருமாவளவன் பேச்சு !
கோவை சுங்கம் பகுதியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா SC/ST ஊழியர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, விஜய் நேற்று பிரச்சாரம் தொடங்கியதை வாழ்த்தி, அவருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தாலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். தமிழகத்தில் வலுவான அணி என்றால் அது திமுக கூட்டணிதான் என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணி இன்னும் உருவாகவில்லை, விஜய் தனியாக செல்வார் என்ற யூகமே நிலவுகிறது என்றும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தனித்தனியாகவே களத்தில் இறங்குவார்கள், பாஜக-அதிமுக பிரிந்தாலும் திமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படாது என்றார். மேலும், பாஜக உள்கட்சிச் சிக்கல் தொடர்பாக, அண்ணாமலை கட்சிக்குள்ளேயே அரசியல் செய்கிறார்; நயினார் நாகேந்திரனும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும், அண்ணாமலை நடவடிக்கைகள் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக தோன்றுகிறது என்றும் கூறினார்.
Next Story



