கோவை அருகே குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் : வைரலான வீடியோ காட்சி

குட்டிகளுடன் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதம் – வைரலாகும் செல்போன் வீடியோ.
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரத்தில், உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. நேற்று இரவு பெரிய தடாகம் சுஜாதா கார்டன் பகுதியில், குட்டிகளுடன் வந்த ஆறு க்கு மேற்பட்ட யானைகள் உணவு தேடி அலைந்தன. அங்கு இருந்தவர்கள் டார்ச் லைட்டில் ஒளி போட்டும், செல்போனில் காட்சிகளைப் பதிவு செய்தும் உள்ளனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும், யானைகள் இடம் மாறிச் செல்லுவதால் விரட்ட முடியாமல் சிரமம் அனுபவித்து வருகின்றனர். யானைகள் வராமல் தடுக்க ரோந்துப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story