கல்வி நிதி தராத மத்திய அரசு மாணவ செல்வங்களை வஞ்சிக்கிறது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி !

கல்வி நிதி தராத மத்திய அரசு மாணவ செல்வங்களை வஞ்சிக்கிறது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி !
X
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் விரைவில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும், சட்ட ஆலோசகர்கள் ஆலோசித்து வரும் நிலையில் விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். மத்திய அரசு கல்வி நிதி வழங்காதது குறித்து அவர், “நாம் தனிப்பட்ட பணம் கேட்கவில்லை, நமது வரி பணத்தையே கேட்கிறோம். கடந்த 2 வருடங்களாக சில கொள்கைகளை ஒத்துக்க வேண்டும் என வற்புறுத்துகிறார்கள். இருப்பினும் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தமிழக அரசு தனது பங்கில் நிதி வழங்கி வருகிறது” என்றார். மேலும், “இவ்வாறு நிதி தராமல் இருப்பது நமது மாணவ செல்வங்களை வஞ்சிப்பதாகும்” என்றும் கூறினார். திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் வளர்ச்சி எதுவும் இல்லை என்ற த.வெ.க தலைவர் விஜய் குற்றச்சாட்டுக்கு, “இதுவரை அவர் பேசியதை பார்க்கவில்லை, பார்த்தவுடன் பதிலளிக்கிறேன்” என்றார். த.வெ.க கூட்டம் குறித்து அவர், “அவர்கள் கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்பது வேறு விஷயம். ஆனால் தி.மு.க அரசு பாரபட்சமின்றி புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
Next Story