காசிபாளையம் கும்பாபிஷேக விழாவில் கும்மியடித்து கொண்டாடிய மகளிர்.

காசிபாளையம் கும்பாபிஷேக விழாவில் கும்மியடித்து கொண்டாடிய மகளிர்.
காசிபாளையம் கும்பாபிஷேக விழாவில் கும்மியடித்து கொண்டாடிய மகளிர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா காசிபாளையம் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ கன்னிமார் சுவாமி ஸ்ரீ புடவகாரி அம்மன் ஸ்ரீ முருகன் ஸ்ரீ சந்தன கருப்புசாமி ஸ்ரீ கருப்பண்ண சாமி ஸ்ரீ மதுரை வீரன் சாமி கோவில் வீட்டில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. மங்கல இசையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று சுவாமி கண் திறப்பு யாக வேள்வி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. யாகவேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது பூஜையில் வைத்திருந்த முளைப்பாரியை கோவில் வளாகத்தில் வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் சுற்றி வந்து கும்மி அடித்து கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.
Next Story