கரூர் -முப்பெரும் விழா நிகழ்வு இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் சுவாமிநாதன்.
கரூர் -முப்பெரும் விழா நிகழ்வு இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் சுவாமிநாதன். கரூரை அடுத்த கோடங்கிப்பட்டியில் திமுக சார்பில் முப்பெரும் விழா வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. 1985 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக கரூரில் முப்பெரும் விழாவை நடத்த திட்டமிட்டு பணிகள் மாபெரும் அளவில் நடைபெற்று வருகிறது. பணிகள் குறித்து நாள்தோறும் ஒவ்வொரு அமைச்சராக வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அதன் அடிப்படையில் இன்று தமிழக செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் முப்பெரும் விழா நிகழ்வு இடத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story





