சூரங்குடியில் ஆவணி கொடை விழா மாட்டு வண்டி பந்தயம்

X
சூரங்குடியில் ஆவணி மாத கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் அருள்மிகு பெத்தனாச்சி அம்மன், முனியசாமி, பெருமாள்சாமி, அய்யனார் திருக்கோவில் ஆவணி மாத கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சின்னமாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டுவண்டி என இரு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில், திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை,தேனி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 77 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. சின்ன மாட்டு வண்டி பந்தயத்திற்கு 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் பந்தயத்திற்கு 5 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
Next Story

