கே. புதுப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டியில் கரைமேல் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு, இன்று மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாட்டு வண்டிகள் சாலையில் துள்ளி குதித்து ஓடின. மாட்டு வண்டிகளை சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது.
Next Story