விராச்சிலை மந்தையம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் மந்தையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு புனித தளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது யாகசாலையில் வைத்து பல்வேறு கால யாக பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலசத்தில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




