பளுகல் : நர்ஸ் கணவர் மர்ம சாவு

X
குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத். ரப்பர் சீட்டுகள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜா (42) தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். விஷ்ணு பிரசாத்திற்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார். மாலையில் சுஜா திரும்பி வந்து பார்த்தபோது விஷ்ணு பிரசாத் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் . உடனடியாக அவரை காரக்கோணம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

