குழித்துறை : வக்கீல் மீது தாக்குதல்

குழித்துறை : வக்கீல் மீது தாக்குதல்
X
காரில் தப்பி ஓட்டம்
குமரி மாவட்டம்  மாராயபுரம் பகுதியை சேர்ந்த அஜித் ( 49 ) . வக்கீலான இவர் நேற்று குழித்துறை  நீதிமன்ற சாலையில் பைக்கில் செல்லும் போது போக்குவரத்துக்கு இடையூறாக கார் நின்றது. இதை அடுத்து அஜித் சம்பந்தப்பட்ட காரில்  இருந்தவர்களிடம் காரை தள்ளி விடுமாறு கூறியுள்ளார். இதில்  தகராறு ஏற்பட்டு, காரில் இருந்த இரண்டு பேர் வக்கீலை  தாக்கி விட்டு தப்பி ஓடினார்கள்.  காயம் அடைந்த அஜித் குதித்துறை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story