நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வீட்டு பணியாளர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், டிரைவிங் லைசென்ஸ் ஆகிய அசல் ஆவணங்களுடன் பாஸ் போர்ட் சைஸ் போட்டோவுடன் எடுத்து வந்து உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளைபெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் இன்று நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் பெரம்பலூர் தொழிலாளர் நல துறை சார்பில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று (15ம்தேதி) வீட்டு பணியாளர்களை தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 18 நலவாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி. இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், முடக்கு ஓய்வூதியம், புதிய ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவித்தொகைகள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழிலாளர் ஆணையர் உத்தரவுப்படி வீட்டுப்பணியாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்து இணைக்க, அவர்களுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இன்று (15ம்தேதி) காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. வீட்டு பணியாளர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், டிரைவிங் லைசென்ஸ் ஆகிய அசல் ஆவணங்களுடன் பாஸ் போர்ட் சைஸ் போட்டோவுடன் எடுத்து வந்து உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளைபெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Next Story