கம்பத்தினை சூழ்ந்து தற்போது செடி, கொடிகள் வளர்ந்து கம்பத்தில் உச்சியின் உயரே மின் வயர்களில்

X
பெரம்பலூர் வட்டம், செங்குணம் ஏரி கடைக்கால் பாலம் வடக்கு பகுதியில் செல்போன் டவர் அருகே ஓடையை ஒட்டிய சாலையின் கிழக்கே ஒரு மின் கம்பம் தென் கிழக்கு திசையில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. சாய்ந்த நிலையில் உள்ள கம்பத்தினை சூழ்ந்து தற்போது செடி, கொடிகள் வளர்ந்து கம்பத்தில் உச்சியின் உயரே மின் வயர்களில் படர்ந்து காணப்படுகிறது. இதனாங வடகிழக்கு பருவ மழை காலங்களில் இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் மேலும் சாய்ந்து கீழே விழுந்து மின் வயர்கள் சாலையின் குறுக்கே அறுந்து விழும் நிலையில் சாலையில் செல்வோருக்கும, போக்குவரத்து வாகனங்களுக்கும் மின் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இது குறித்து மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

