டூ வீலர்கள் மோதிய வழக்கில் ஒரு மாதம் கழித்து பெண் மீது வழக்கு பதிவு.
டூ வீலர்கள் மோதிய வழக்கில் ஒரு மாதம் கழித்து பெண் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கீழ ஆனைகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி வயது 25. இவர் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை 10 மணி அளவில் பாளையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் டூவீலரில் கரூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே வந்தபோது அதே சாலையில் கரூர் அடுத்த காளியப்ப கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி சித்ராதேவி வயது 50 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் பாலசுப்பிரமணி ஓடிவந்த டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாலசுப்பிரமணிக்கு தலையில் காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது தொடர்பாக அளித்த புகாரில் தாந்தோணி மலை காவல்துறையினர் புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் நேற்று செப்டம்பர் 13ஆம் தேதி விபத்து ஏற்படுத்திய சித்ராதேவி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்
Next Story





