விஷமருந்தி விவசாயி பலி

விஷமருந்தி விவசாயி பலி
X
குமாரபாளையத்தில் விஷமருந்தி விவசாயி பலியானார்.
குமாரபாளையம் அருகே சாணார்பாளையம் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன், 46. விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றுமுன்தினம் காலை 07:00 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றவர், நேற்று காலை வரை திரும்பி வரவைல்லை. இவரது மனைவி, சரஸ்வதி, 47, மற்றும் உறவினர்கள் தோட்டத்தில் சென்று பார்த்த போது, அங்கே கீழே விழுந்து கிடந்துள்ளார். மார்பு, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் கொப்புளம் ஏற்பட்டு இருந்தது. ஏதோ விஷமருந்தி இறந்துள்ளார் என்று அறிந்து கொண்டனர். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்த போது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி, மனைவி சரஸ்வதி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story