டூவீலர்கள் மோதிய விபத்தில் தாய், மகன் படுகாயம்

X
Komarapalayam King 24x7 |14 Sept 2025 8:17 PM ISTகுமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் தாய், மகன் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் பாலசுப்ரமணியன், 21. இவரும், இவரது தாயாரும் டி.வி.எஸ். வாகனத்தில் குமாரபாளையம் மார்க்கெட் போய் விட்டு பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர், சத்திய நாராயண மருத்துவமனை அருகே வரும் போது, அருகே வந்த பல்சர் வாகன ஓட்டுனர், இவர்கள் வந்த வாகனம் அருகே வந்த போது, பாலசுப்ரணியன் வண்டியில் இருந்த பையின் கைப்பிடி, அருகே வந்த வாகனத்தில் சிக்கி, நிலை தடுமாறி, கீழே விழுந்ததில் தாய், மகன் காயமடைந்தனர். இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து பாலசுப்ரமணியம் குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குபப்திவு செய்து, விபத்துக்கு காரணமான பல்சர் வாகன ஓட்டுனர் குப்பாண்டபாளையம், தனலட்சுமி நகரில் வசிக்கும் கூலித் தொழிலாளி கருணாகரன், 45, என்பவரை கைது செய்தனர்.
Next Story
