மேம்பாட்டு கழகத்தை திறந்து வைத்து அமைச்சர்
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், இன்று (செப்.14) மதுரை சிவகாசி நாடார்கள் உறவின்முறை முயற்சியால் மதுரை திறன் மேம்பாட்டு கழகத்தை திறந்து வைத்து, சமூக அமைப்புகள் தங்களிடம் உள்ள உட்கட்டமைப்புகளை வணிக நோக்கத்திற்காக அல்லாமல் திறன் மேம்பாடு போன்ற பொது நோக்குகொண்ட கட்டமைப்பாய் உருவாக்க பயன்படுத்துவது பாராட்டுக்குறியது என்று குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதல்வர் அசோக் குமார், மதுரை திறன் மேம்பாட்டு கழகத்தின் செயலாளர் முரளி பாபு அற்புதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




