மத்தூர் அருகே திருமணமான இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த குள்ளம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (30). இவருக்கும். பாரூர் பகுதியை சேர்ந்த பூஜா (20) என்பவருக்கும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் பூஜா தினமும் செல்போனில் அதிக நேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த பூஜா கடந்த 11-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை. மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி பூஜா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

