கணவர் கொலை செய்யப்பட்டதால் மனைவி தற்கொலை

கணவர் கொலை செய்யப்பட்டதால் மனைவி தற்கொலை
X
கணவர் கொலை செய்யப்பட்டதால் மனைவி தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
தூத்துக்குடியில் கணவர் கொலை செய்யப்பட்டதால் மன வேதனையில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி தாளமுத்து நகர், தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் மனைவி மோனிஷா (24) இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மதன் சேலத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அதன்பின்பு மோனிஷா தனது மகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார். கணவன் மதன் கொலை செய்யப்பட்டதில் இருந்து மோனிஷா மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story