கோவை: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது !
கோவை, கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற சோதனையில், தடை செய்யப்பட்ட 78 கிலோ புகையிலை பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. திருநெல்வேலியைச் சேர்ந்த கொம்பையா (33) கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு புகையிலை பொருட்கள் வழங்கிய சோமனூரைச் சேர்ந்த ஜெகன் அந்தோனி ராஜேஷ் (41) உடனும் போலீசார் நடவடிக்கை எடுத்து, அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Next Story



