கோவை மாணவர்கள் சிலம்பாட்டத்தில் உலக சாதனை !

'ஐ லவ் இந்தியா' வடிவில் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்.
கோவை செலக்கரசல் பகுதியில் உள்ள பாரத் நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில், 220 மாணவர்கள் ஒருங்கிணைந்து 79 நிமிடங்கள் தொடர்ந்து ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்தனர். "ஐ லவ் இந்தியா" மற்றும் "சுதந்திரா இந்தியா 79" என்ற வடிவமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி நிறுவனம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சி, தேசப்பற்றையும் பாரம்பரிய கலையையும் உயர்த்திப் பேசுவதாக அமைந்தது. உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Next Story