கோவை மாவட்டத்தில் யு.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த ராணுவப் பணியாளர் தேர்வு !
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த ராணுவப் பணியில் சேர்வதற்கான தேர்வு நேற்று கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 4 தேர்வு மையங்களில் காலை ஆங்கிலம், நண்பகல் பொது அறிவு, மாலை அடிப்படை கணிதம் என 3 அமர்வுகளில் தேர்வு நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் தலைமையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பு செய்தனர். மத்திய அரசின் 2 அதிகாரிகள் நேரடி ஆய்வுக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களில் செல்போன் ஜாமர்கள், தடையில்லா மின்சாரம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தேர்வர்கள் வர பஸ்கள் இயக்கப்பட்டன.
Next Story



