அதிமுகவினர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

X
தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கழகப் பொருளாளரும், முன்னாள் அமைச்சர் அமைச்சருமான மாண்புமிகு திண்டுக்கல் சி.சீனிவாசன் உத்தரவின் பேரில், கழக அமைப்புச் செயலாளர் மருதராஜ் தலைமையில், திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சி எஸ் ராஜ்மோகன் முன்னிலையில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன்,மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story

