கோவை: திமுக முப்பெரும் விழா - மாரத்தான் ஓட்டம் !
தி.மு.க முப்பெரும் கழக விழாவை முன்னிட்டு மாநகர் மாவட்ட தி.மு.க சார்பில் பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில் 4, 6, 10 கி.மீ. தூரங்களுக்கு மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் கொடியசைத்து தொடங்கி வைத்த இந்தப் போட்டியில் 10,000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் வழங்கப்பட்டதுடன், வெற்றி பெற்றோருக்கு பரிசுத் தொகைகளும் வழங்கப்பட்டன.
Next Story



