தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் கொண்டாட்டம்.
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் கொண்டாட்டம். தமிழகத்தின் முதல் முதல்வரும் திமுக நிறுவன தலைவருமான அறிஞர் அண்ணா அவர்களின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட திமுக சார்பில் கட்சியின் மாநகர செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான கனகராஜ் தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர், இதனைத் தொடர்ந்து கரூர்-கோவை சாலையில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில நெசவாளர் அணி தலைவர் ராஜேந்திரன் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.
Next Story





