திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்

தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்
தர்மபுரியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தர்மபுரி நகர கழக செயலாளர் நாட்டான் மாது ஏற்பாட்டில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ மணி MP தலைமையில் ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து கந்தசாமி வாத்தியார் தெரு வழியாக நான்கு ரோட்டில் உள்ள அண்ணா திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்று பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி Ex MLA கலந்து கொண்டு சிறப்பித்தார் நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சி செல்வராஜ் மாநில நிர்வாகி செந்தில்குமார் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன் மாவட்ட நிர்வாகி ரேணுகாதேவி,ஒன்றிய கழக செயலாளர்கள் காவேரி, பெரியண்ணன், மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
Next Story