கோவை: அகழி தாண்டி மின் வேலியை உடைத்த காட்டு யானைகள் !

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமப்பகுதிகளில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன் 12 யானைகள் கொண்ட கூட்டம் பெரிய தடாகம் மற்றும் வீரபாண்டி பகுதிகளில் சுற்றி வனத்துறையினர் விரட்டிய நிலையில், நேற்று இரவு மீண்டும் காளையனூர் பகுதியில் புகுந்தது. அங்கு அருள் காந்தி கோழிப்பண்ணை அருகே உள்ள வாழைத்தோட்டத்தில் யானைகள் அகழியைத் தாண்டி, மின் வேலியை சேதப்படுத்தி நுழைந்து பல வாழைமரங்களையும், தண்ணீர் பம்ப், போர்வெல், மோட்டாரையும் சேதப்படுத்தின.இதனால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், யானைகள் கிராமங்களுக்கு வராமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்கவும் கிராம மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story