லைட் ஹவுஸ் கார்னர்-அறிஞர் அண்ணா பிறந்தநாள். அதிமுகவினர் கொண்டாட்டம்.
லைட் ஹவுஸ் கார்னர்-அறிஞர் அண்ணா பிறந்தநாள். அதிமுகவினர் கொண்டாட்டம். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எம்ஜிஆர் அவர்களின் மானசீக தலைவருமான அறிஞர் அண்ணா 116வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர்கள் ஆன அறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் முழு திரு உருவ சிலைகளுக்கு கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் மலர்மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திரு வி க,நகர செயலாளர் நெடுஞ்செழியன் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஸ் (எ) முத்துக்குமார் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
Next Story









