அன்புமணி ராமதாஸ்- தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.கரூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

அன்புமணி ராமதாஸ்- தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.கரூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
அன்புமணி ராமதாஸ்- தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.கரூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாசை மீண்டும் கட்சியின் தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தனர். தீர்மானத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இன்று பாமக கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் -ஐ அங்கீகாரம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பாமகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து கரூர் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி அன்புமணி ராமதாசை வாழ்த்தி கோஷங்களை எழுப்பி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநகர செயலாளர் ராக்கி முருகேசன் மாவட்ட அமைப்பு செயலாளர் குணசீலன் மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story