குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடந்தது.

X
Komarapalayam King 24x7 |15 Sept 2025 4:56 PM ISTவடிகால், வாட்டர் டேங்க் , அமைக்க கோரி நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. . நகராட்சி ஆணையாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். தி.மு.க, அ.தி.மு.க. நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும், சாலைகள் அமைக்க வேண்டும் மற்றும் பழுதடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் மேலும் மூன்றாவது வாடு நகர் மன்ற உறுப்பினர் வேல்முருகன் , தனது வார்டு பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியின் எதிரியிலே குப்பை கிடங்கு , அதில் பாம்புகள் வருவதாகவும் குப்பை கிடங்கை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் தெரிவித்தார். பின்னர் விஜய்கண்ணன் பேசிய போது, குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள 33 நகர மன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய , கழிப்பிடம், சாக்கடைக்கால்வாய் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட நான்கு அடிப்படை வசதிகளை தேவைகளை அடுத்த நகர மன்ற கூட்டத்திற்குள் கோரிக்கை மனுவாக வழங்க வேண்டும். அவற்றிற்கு உடனடியாக நடவடிக்கை . ஏனெனில் விரைவில் தேர்தல் வர உள்ளதால் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்க முடியாமல் போய்விடும், என .கூறினார். நகராட்சி தலைவரின் கோரிக்கைகளை அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். நகராட்சி கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Next Story
