ஆட்டோ ஓட்டுனர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

ஆட்டோ ஓட்டுனர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு
X
குமாரபாளையத்தில் ஆட்டோ ஓட்டுனர் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் வசித்து வந்தவர் சிவாஜி (எ) வெங்கடேசன், 49. ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் செப். 12 வெள்ளிக்கிழமை நாளில், தான் குடியிருக்கும் வாடகை வீட்டில், குடி போதையில் கதவை உள்புறம் தாழிட்டுக் கொண்டு தூங்க சென்றுள்ளார். நேற்று மாலை 06:00 மணியளவில் இவரது வீட்டின் கதவு சந்தின் வழியாக துர்நாற்றத்துடன் ரத்தம் வழிந்து வந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் சென்ற போலீசார், வி.ஏ.ஓ. முருகன் முன்னிலையில் கதவை உடைத்து, பிரேதத்தை மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இவரது மனைவி பல ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். மகன், மகள் ஆகியோருக்கு திருமணம் ஆகி வாழ்ந்து வருகின்றனர். இவர் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
Next Story