நாமக்கல்: அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்! எம்பி, அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு!

நாமக்கல்: அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்! எம்பி, அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு!
X
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் 117-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாநில அமைச்சர் / திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர் மா. மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி ஆகியோர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாமக்கல் மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் 117-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.அதன்படி, நாமக்கல் நகர திமுக சார்பில், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநிலத் துணைத் தலைவர் / மாநில ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை
அமைச்சர் மருத்துவர் மா மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி உள்ளிட்டோர், மோகனூர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு, மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாதுரையின் புகழை போற்றும் வகையில் சிறப்புரையாற்றி பேசினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story