விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்த இயக்குனருக்கு விருது

விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்த இயக்குனருக்கு விருது
X
மதுரை அவனியாபுரத்தில் விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்த இயக்குனருக்கு விருது வழங்கப்பட்டது.
மதுரை அவனியாபுரத்தில் நேற்று (செப்.14) இரவு இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தின் புறநகர் மாவட்ட 16 வது ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் மதுரை எம்பி வெங்கடேசன் அவர்கள் வாக்குரிமையை பணத்திற்கு விற்க கூடாது எனும் விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்து, இயக்கிய மாசாணம் என்பவருக்கும் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் விருதுகளையும் நினைவு பரிசுகளையும் வழங்கினார். நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story