வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாநில சுகாதார துறை இணை இயக்குநர் குருநாதன் நேரில் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாநில சுகாதார துறை இணை இயக்குநர் குருநாதன் நேரில் ஆய்வு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூபாய் 23 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் 6 தளம் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா கடந்த ஜூன் மாதம் 26 ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிலையில் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்றும், மேல் தளத்தில் செயல்பட்டு வரும் வெளி நோயாளிகள் பிரிவு தரை தளத்திற்கு மாற்ற வேண்டும், லிஃப்ட் அடிக்கடி பழுதால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர், சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சி.டி எஸ்கேன் அறை உள்ளது ஆனால் சி.டி.ஸ்கேன் இயந்திரம் இல்லை, அறுவை சிகிச்சை மேற்கொள்ள போதிய உபகரங்கள் இல்லை, பணியாளர்கள் பற்றாக்குறையால் பராமரிப்பு முற்றிலும் இல்லாத சூழல், மழைக்காலங்களில் புதிய கட்டிடத்திற்கு செல்லும் சாலை சேரும் சகதியுமாக இருப்பதால் சாலை வசதி செய்து தரக்கோரி சமூக ஆர்வலர்கள் மத்திய மற்றும் மாநில சுகாதார துறை அலுவலகங்களுக்கு புகார் மனுக்கள் அனுப்பிய வண்ணம் இருந்தது. இதன் அடிப்படையில் மாநில சுகாதாரத்துறை இணை இயக்குநர் குருநாதன் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் ஆய்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:- அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தில் சில குறைபாடுகள் குறித்து புகார் மனு வந்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதாகவும், மருத்துவ சேவைகள் பொருத்தவரையில் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், சில குறைபாடுகள் நேரில் பார்த்து கண்டு பிடித்துள்ளதாகவும், அனைத்தையும் ஆய்வு அறிக்கை தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார். ஆய்வு பணியின் போது மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி,மற்றும் தமிழரசன் வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவசுப்பிரமணியம் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story

