திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்த திமுகவினர்

திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்த திமுகவினர்
X
ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
அரியலூர் செப்.16 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை ஒட்டி திமுக நகர செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான கருணாநிதி தலைமையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இருந்து உருவமாக சென்று திருச்சி சாலையில் உள்ள அண்ணா சிலையை அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து மண் மொழி மானம் காத்திட ஊரணியில் தமிழ்நாடு எனும் உறுதி மொழியினை திமுக சட்ட திட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா சந்திரசேகர் முன்மொழிந்திட நிர்வாகிகள் வழிமொழிந்தனர் நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம் பி பாலசுப்பிரமணியம் மாவட்ட துணை செயலாளர் மு. கணேசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தங்க ராமகிருஷ்ணன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுபா ஷா வசந்த பகலவன் மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story