ஆசிரியர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு

X
அரியலூர், செப். 15- அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசியர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் முனைவர் இளங்கோவன் , கலந்து கொண்டு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களையும் சென்றடைய வேண்டும் . பசுமை பரப்பை அதிகரிக்க அதிக மரக்கன்றுகளை நடவேண்டும். அழகிய பூமி பந்தை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றார் . அரியலூர் அரசு கலைக் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன், காலநிலை மாற்றம், அதன் விளைவுகள் பற்றி ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார். சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை காலநிலை மாற்றத்தை தனித்தலில் மஞ்சள் பையின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். மரங்களின் நண்பர்கள் இயக்க சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பகத்கான், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரமேஷ், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், பள்ளி துணை ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், 100 மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் குனபாலினி வரவேற்றார். முடிவில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செüந்தர பாண்டியன் நன்றி கூறினார். :
Next Story

