அண்ணா சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு

X
அரியலூர்,செப்.15- மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, அரியலூரிலுள்ள அவரது சிலைகளுக்கும், படத்துக்கும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினர். அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு, சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா தலைமையில் மதிமுக மாவட்டச் செயலர் ராமநாதன், ஒன்றியச் செயலர் சங்கர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ப.இளவழகன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், நகரச் செயலர் செந்தில், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் நகரச் செயலர் முருகேசேன் தலைமையில் , மாநில பொதுக் குழு உறுப்பினர் பாலு, மகளிரணிச் செயலர் லதா பாலூ உள்ளிட்டேர் அண்ணாசிலைக்கு மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆர் கழக அமைப்பாளர் மணிவேல் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவத்து மரியாதை செலுத்தினர். தா.பழூரிலுள்ள அண்ணாசிலைக்கு, சட்டப் பேரவை உறுப்பினர் க.சொக.கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக கட்சி அலுவலகத்திலுள்ள அண்ணா திருவுருவப் படத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் இராம.ஜெயவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் ஜெயங்கொண்டம், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கண்ட கட்சியினர், அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். .
Next Story

