ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்..

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்..
X
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்..
ஒய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க தலைவர் கே.சி. கருப்பன் தலைமை வகித்தார். ராசிபுரம் கிளை சங்கத் தலைவர் க.தாளமுத்து" அனைவரையும் வரவேற்றார். கிளை செயலாளர் ஆர்.நஞ்சப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.ராஜு, அ. குணசேகரன், ப.கந்தசாமி, மாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருச்செங்கோடு கிளைத் தலைவர் மு. நடராஜன், மோகனூர் கிளைத்ல தலைவர் காளியப்பன், பரமத்தியைச் சேர்ந்த "மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷாகரின், சேந்தமங்கலம் தலைவர் நமச்சிவாயம், எருமப்பட்டி தலைவர் நிவர்த்தி சாது, கொல்லிமலை தலைவர் சந்திரசேகரன், நாமக்கல் கிளைத் தலைவர் சுப்பிரமணியம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் செப். 27ஆம் தேதி அறந்தாங்கியில் நடைபெறும் கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டச் செயலாளர் இந்த ஆண்டின் செயல் திட்டங்களை வாசித்தார். மாவட்ட பொருளாளர் வரவு செலவு ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஒய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றி மற்றும் ஓய்வூதியர் ஆயுள் காப்பீட்டு திட்டம் பற்றி விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் வீர புத்திரன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story