திருவேங்கடத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி கூறிய போது 2026 தேர்தலில், அதிமுக 210 தொகுதிகளை வென்று, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என உறுதியாகக் கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட கழக அவைத்தலைவர் மூர்த்தி, மாவட்டக் கழக இணைச் செயலாளர் சண்முகப்பிரியா, மாவட்டக் கழக துணைச் செயலாளர் மாரியப்பன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் சகுந்தலா உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

