எலி மருந்து சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

X
மதுரை மாவட்டம் பாலமேடு விநாயகர் கோவில் தெரு சேர்ந்த சிவசுப்பிரமணியனின் மகன் முத்துக்குமார் ( 25) என்பவர் பொறியியல் படிப்பு படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் . இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் விரக்தியில் முத்துக்குமார் கடந்த பத்தாம் தேதி மாலை முடுவார்பட்டி கண்மாய்க்கரையில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (செப் .15)மதியம் அவர் உயிரிழந்தார் இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.
Next Story

