அரசு ஊழியர் ஏமாற்றியதாக பட்டதாரி பெண் தற்கொலை

X
குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ரமணி (41). பட்டதாரியான இவருடைய கணவர் அஜித்குமார் ஏற்கனவே இறந்துவிட்டார். 15 வயதில் ஒரு மகள் மட்டும் உள்ளார். நேற்று ரமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் ரமணி எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அரசு ஊழியர் ஒருவர் இவரை ஏமாற்றி பணம் நகைகளை அபகரித்துக் கொண்டதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, வேறு பெண்ணை திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதால், தற்கொலை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story

