மார்த்தாண்டம் :  மேம்பாலத்தில் நிரந்தர பேரிகார்டு

மார்த்தாண்டம் :  மேம்பாலத்தில் நிரந்தர பேரிகார்டு
X
போக்குவரத்து போலீஸ் அமைப்பு
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் உடைய மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் பல விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருபுறங்களிலும் நிரந்தர பேரிகார்டு நேற்று அமைக்கப்பட்டுள்ளது. இரவு வெளிச்சத்திலும் இந்த பேரிகார்டு ரிப்ளக்ட் ஆகி தெளிவாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story